×

நடிகை சமந்தா மருத்துவமனையில் அட்மிட்?

சென்னை: நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தா நடித்துள்ளார். இதற்கிடையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடியுள்ளார். இந்த படம் வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் சமந்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமந்தாவின் மேலாளர் மஹிந்த்ரா கூறும்போது, ‘சமந்தா இப்போது வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். அவர் பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதிக்கப்படவில்லை’ என்றார். சமந்தாவுக்கு என்ன உடல்நல பிரச்னை என்பது குறித்து அவரது தரப்பில் கூற மறுத்துவிட்டனர்….

The post நடிகை சமந்தா மருத்துவமனையில் அட்மிட்? appeared first on Dinakaran.

Tags : Samantha ,Chennai ,Vijay Sethupathi ,Nayanthara ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி